Viyan Pradheep

About the author

கனவுகளை சுமந்து செல்லும் வாழ்க்கைப் பேருந்தின் கடைசி சீட்டு பயணி.சுவற்றில், பேப்பரில், பிளாக்கில் எங்கு எங்கோ எதை எதையோ கிறுக்கி விட்டுப் போகும் ஒரு பறவை. இன்று கிண்டிலில் கிறுக்கி இருக்கிறது முதல் புத்தகமான "கொஞ்சம் கவிதை கொஞ்சம் காதல்" என்ற கவிதைத் தொகுப்பிற்காக. எழுத்தாளரா? முன்ன பின்ன கேள்விப் பட்டதில்லையே என்றால், ஆமாம் சொல்லாத கதையாசிரியர் என்று சொல்லலாம். இங்கே எல்லோருக்கும் ஒரு கதை இருக்கிறது, எல்லோரைச் சுற்றியும் கதை இருக்கிறது. நாம் மனிதர்களால் மட்டுமல்ல மனிதர்களின் கதைகளாலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கவிதை எழுதுவாரா? கவிதை ரசிப்பார், எல்லா படைப்பாளியும் ஒரு ரசிகன்,எல்லா ரசிகனும் படைப்பாளியாக முடியும். அப்புறம் எல்லாரைப் போலவும் நானும் ஒரு இன்ஜினியர் பட்டதாரி, ஆமா நீங்கள் நினைத்தது போலவே அதே IT துறையில் வேலை. வாங்கிய விருதுகள் என்றால், நீ எழுதியது நல்லா இருக்கு என்று சகாக்கள் சொன்னதெல்லாம் நான் வாங்கிய உயரிய விருதுகள்தான். இன்னும் சொல்லிட்டே போலாம் , எல்லாமும் எழுதி விட்டால் பின் எப்போது பேசுவது? வாங்க மற்றவற்றை நேரில் பேசுவோம். கொஞ்சம் எழுத்துக்களுடன் வியன் பிரதீப்

Read full bio

Books

Customers also bought items by